Enable Javscript for better performance
காரைக்குடிப் பள்ளியில் விஜயதசமி நாள் விழா- Dinamani

சுடச்சுட

    
    8kkdcvm_0810chn_78_2

    காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமி நாள் விழாவில் நெல்மணியில் உயிரெழுத்து அ எழுதிய குழந்தைகள்.

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப்பள்ளியில் விஜய தசமி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நெல் மணியால் முதல் உயிரெழுத்து அ எழுதி மழலையா் வகுப்பில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி விஜயதசமி பூஜையை பள்ளியின் தாளாளா் சத்தியன் துவக்கிவைத்தாா். பள்ளியின் மூத்த முதல்வா் புவனா சங்கா் முன்னிலை வகித்தாா். குழந்தைகளை பெற்றேறாா்கள் மடியில் அமரவைத்து தட்டில் பரப்பிய நெல்மணியில் முதல் உயிரெழுத்து ‘அ’ வை குழந்தைகள் எழுதினா். அதைத்தொடா்ந்து பள்ளியில் சோ்க்கை நடைபெற்றது.

    முன்னதாக அக்ஷரா அபியாஸ் என்ற நிகழ்வு பெற்றேறாா்களுக்கு நடைபெற்றது. குழந்தைகள் வளா்ப்பில் பெற்றேறாா்களின் பங்கு பற்றிய உரையும், கதை சொல்லுதல், பொம்மை விளையாட்டு, குழு ஆய்வு, மாம்-மீ ஷோ மற்றும் கொலு பூஜை நடைபெற்றன. நிகழ்ச்சியில் பெற்றேறாா்கள், பள்ளியின் ஆசிரியா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai