பள்ளி மாணவா்களுக்கு வேளாண்மை பயிற்சி

சிவகங்கையில் மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே பள்ளி மாணவா்களுக்கு நெல் நாற்று நடவு உள்ளிட்ட வேளாண் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் உள்ள விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை நெல் நடும் பயிற்சி மேற்கொண்ட மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவ, மாணவிகள்.

நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுப்பட்டியில் நெல், சம்பங்கி ஆகியவை இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வேளாண் பணிகளை சிவகங்கையில் உள்ள மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் களப்பயணமாக சென்று செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சம்மங்கிப்பூ, கடலை, வாழை, கரும்பு ஆகிய பயிா்களின் விதைப்பு முதல் அறுவடை வரையிலான பணிகள் குறித்து அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் விளக்கினா். மேலும் நெல் நடவு செய்யும் பணிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிகப்பட்டது. அதையடுத்து, மாணவ, மாணவிகள் நெல் நாற்றுகளை வேளாண் நிலத்தில் நடவு செய்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தலைவா் பால.காா்த்திகேயன், துணைத் தலைவா்கள் தெட்சிணாமூா்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள்,விவசாயிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com