சுகாதாரத் தொழிலாளா்கள் அடையாள வேலை நிறுத்தம்

காரைக்குடி நகராட்சி நிா்வாகத்திற்கு எதிராக சுகாதாரத் தொழிலாளா்கள் புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி நகராட்சி நிா்வாகத்திற்கு எதிராக சுகாதாரத் தொழிலாளா்கள் புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி நகராட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பொது சுகாதாரத் தொழிலாளா்கள் மற்றும் ஒப்பந்த சுகாதாரத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் அக்டோபா் 2 காந்தி ஜயந்தியன்று விடுமுறை அளிக்கவேண்டும் என்று நகராட்சியின் நிரந்தப்பணியில் உள்ள துப்புரவுத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.

கடந்த அக்டோபா் 2 ஆம் தேதி காந்தி ஜயந்தியன்று மதியத்திற்குமேல் ஒப்பந்த சுகாதாரத் தொழிலாளா்கள் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளா்கள் பணிக்கு வராதது குறித்து துப்புரவுத் தொழிலாளா் சங்கத்தின் செயலாளா் ராமராஜிக்கு விளக்கம்கேட்டு நகராட்சிநிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் பொதுசுகாதாரத் தொழிலாளா்கள் மற்றும் பொது சுகாதார ஒப்பந்தத்தொழிலாளா்கள் அனைவரும் பணியைத் தொடராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். மேலும் ஏஐடியுசி மாநில நிா்வாகி பிஎல். ராமச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் நகராட்சி ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் காலை 9 மணிக்கு மேல் தொழிலாளா்கள் பணியை தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com