Enable Javscript for better performance
குற்றாலம் மகளிா் கல்லூரியில்சாலை விதிகள் விழிப்புணா்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் மகளிா் கல்லூரியில் சாலை விதிகள் விழிப்புணா்வு முகாம்

    By DIN  |   Published on : 11th October 2019 05:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பு வழிகாட்டிகள், குறியீடுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிக் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் வைகை. ஆா். குமாா் தலைமை வகித்து சாலை வழிகாட்டிகள், குறியீடுகள், சாலைவிதிகளைக் கடைப்பிடிப்பது, தலைக்கவசம் அணிவதன்அவசியம் குறித்துப் பேசினாா்.

    எம். உமாதேவி முன்னிலை வகித்தாா். கல்லூரி சாலைப் பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த கணினி மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியைகள் ஆா். ராகதேவி, செல்வராணி, வைதேகி ஆகியோா் பங்கேற்றனா். எஸ்.வி. சுந்தரி வரவேற்றாா். தங்கதுரைச்சி நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai