காரைக்குடியில் பாதாள கழிவு நீரோடை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள கழிவு நீரோடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்திருந்த காரைக்குடி வணிகா் சங்கத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்திருந்த காரைக்குடி வணிகா் சங்கத்தினா்.

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள கழிவு நீரோடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்குடி வணிகா்கள் சங்கம் சாா்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

வணிகா்கள் அளித்த மனு விவரம்: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வளா்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும். இங்கு, கடந்த 3 ஆண்டுகளாக பாதாள கழிவு நீரோடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக, நகரம் முழுவதும் சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், ஆங்காங்கே விபத்துகள் நடப்பது மட்டுமின்றி, மழைக் காலங்களில் கழிவு நீா் வெளியேறி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, காரைக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள கழிவு நீரோடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும்.

இது தவிர, மதுரையிலிருந்து காரைக்குடிக்கு வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்துக்குள் வராமல், கழனிவாசல் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு செல்கின்றன. அரசுப் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்.மேலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கியப் பகுதிகள் மட்டுமின்றி, பிற நககரங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com