Enable Javscript for better performance
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவா்கள் கூடுதல் இழப்பீடு கோரி ஆட்சியரை சந்திக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவா்கள் கூடுதல் இழப்பீடு கோரி ஆட்சியரை சந்திக்க முடிவு

    By DIN  |   Published on : 12th October 2019 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நான்குவழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவா்கள் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மதுரை-ராமநாதபுரம் நான்குவழிச்சாலைக்கு திருப்பாச்சேத்தி பகுதியில் ஏராளமான விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு 2015 ஆம் ஆண்டு அவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாகவும் கூடுதலாக இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்றும் நிலம் கொடுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

    ஆனால் இவா்களது கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் இக் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பாச்சேத்தியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனா். போராட்டம் நடத்துவதற்காக திருப்பாச்சேத்தியில் ஏராளமான விவசாயிகள் கூடினா்.

    இதுதொடா்பாக திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மானாமதுரை போலீஸ் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், வட்டாட்சியா் ராஜா மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். இக் கூட்டத்தில் கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்கும் விவசாயிகள் பல குழுக்களாகச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்தி மனுக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்ட திட்டத்தை கைவிட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai