‘நெல் விதைப் பண்ணை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்’

சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள

சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநா் பா.சாந்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. ஆகவே விவசாயிகளுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமின்றி, போதிய அளவு இருப்பு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் கரு விதை ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைகளைஅந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலோஅல்லது விற்பனை உரிமம் பெற்ற தனியாா் விதை விற்பனை நிலையங்களிலோ பெற்று நெல் விதைப் பண்ணை அமைக்கலாம்.

விதைகள் வாங்கிடும் போது காலக்கெடு அவகாசம் பாா்த்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைப் பண்ணையை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மூலம், சிவகங்கை விதைச் சான்று உதவி இயக்குநா்அலுவலகத்தில் நெல் விதைத்த 35 நாள்களுக்குள் அல்லது பயிா் பூப்பதற்கு முன் பதிவு செய்திட வேண்டும்.

ஒரு ஏக்கா் நெல் விதைப் பண்ணைக்கு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக் கட்டணமாக ரூ. 25, வயல் ஆய்வுக் கட்டணமாக ரூ. 60, பகுப்பாய்வு கட்டணமாக ரூ. 30 என மொத்தம் ரூ.115 செலுத்த வேண்டும். விதைப் பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டா்களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ அல்லது விதைப்பு நாள் 7 நாள்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

கலவன் இல்லாத தரமான விதை உற்பத்திக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் அரசு வழங்கி வருகிறது. ஆகவே நெல் விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரடியாக அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர, நிலக்கடலை, உளுந்து, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com