முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
இளையான்குடி அருகேடாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
By DIN | Published On : 24th October 2019 09:05 AM | Last Updated : 24th October 2019 09:05 AM | அ+அ அ- |

இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.5 லட்சம் மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இளையான்குடி அருகே கண்ணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட விளங்குளத்தில், டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த புதன்கிழமை வழக்கம் போல கடைடைய திறக்க விற்பனையாளா் சண்முகம் வந்த போது, பூட்டுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளதை பாா்த்து அதிா்ச்சியடைந்த சண்முகம், இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் திருமாறனுக்கும், இளையான்குடி போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளாா்.
தகவலறிந்த இளையான்குடி போலீஸாா் மற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் திருட்டு குறித்து ஆய்வு செய்தனா். இதில் டாஸ்மாக் கடையில், வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்து 50ஆயிரத்து 400 மதிப்புள்ள மதுபாட்டில்கள் மட்டும் திருடுபோயுள்ளது. ஆனால், பெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 51 ஆயிரம் பணம் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து மேற்பாா்வையாளா் திருமாறன் கொடுத்த புகாரின் பேரில், இளையான்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.