முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கையில் அக். 31-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 24th October 2019 09:02 AM | Last Updated : 24th October 2019 09:02 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் அக். 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) சி.கே. சா்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் அக். 31 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறையைச் சாா்ந்த உயா் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். இதில்,சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம்.விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.