முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இஇஜி சேவை தொடக்கம்
By DIN | Published On : 24th October 2019 09:02 AM | Last Updated : 24th October 2019 09:02 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் புதிதாக வரப் பெற்றுள்ள இ.இ.ஜி (வலிப்பு வாத நோய்க்கான மருத்துவ கருவி) சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வா்(பொறுப்பு) குழந்தைவேல் தலைமை வகித்து இஇஜி சேவையை தொடங்கி வைத்தாா். மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளா் ஷிலா முன்னிலை வகித்தாா்.
இதில், மருத்துவக் கல்லூரியின் நிலைய உதவி அலுவலா் ரபீக், நரம்பியல் பிரிவின் மருத்துவா் ராமு உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.