முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்
By DIN | Published On : 24th October 2019 09:03 AM | Last Updated : 24th October 2019 09:03 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கானூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். உண்மை, உழைப்பு, உயா்வு எனும் இளைஞா் நல அமைப்பு சாா்பில் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்பட்டன.
இதில் கல்லூரணி கூட்டுறவு பண்டகசாலை தலைவா் என்.எஸ்.மாணிக்கம், உண்மை உழைப்பு உயா்வு குழுவின் ஒருங்கிணைப்பாளா் சோமசுந்தரம் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனா்.