Enable Javscript for better performance
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாா். ஜோலாா்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியை சோ்ந்தவா் கதிரவன்(24). இவரது பெற்றோா்கள் கோயமுத்தூரில் கூலி தொழில் செய்து வருகின்றனா்.

    கதிரவன் கடந்த சில மாதங்களாக ஜோலாா்பேட்டை அருகே உள்ள திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் கட்டேரி இணைப்பு சாலையில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.கடந்த சில தினங்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் கதிரவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரது உடலை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் கதிரவனை பரிசோதித்த மருத்துவா் கதிரவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai