Enable Javscript for better performance
தமிழை வளா்த்துவரும் சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரம் அளிக்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழை வளா்த்துவரும் சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரம் அளிக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 31st October 2019 02:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழை வளா்த்து வரும் சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் அளித்து பாதுகாக்கவேண்டும் என்று தமிழ்ச்சுரங்கம் நிறுவனா் தலைவா் பேராசிரியா் ஆறு. அழகப்பன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் தமிழகமுதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் மாநிலம் அமைந்த நவம்பா் 1-ந் தேதி கொண்டாடுகிற இந்நாளில் இக்கடிதம் அனுப்படுகிறது. இன்று தமிழைப்பாதுகாத்து வளா்க்கும் நிறு வனங்கள் பல இருந்தாலும் 100 ஆண்டுகளாகத் தமிழைத்தாங்கி பாதுகாத்து வரும் பலசிற்றிதழ்களும் உள்ளன.அவைகள் வளர முதுகெலும்பாகவிளம்பரங்கள் இருக்கவேண்டும்.தொலைகாட்சி,மாத,வாரஇதழ்கள் பலவிளம்பரங்களால் பெரும் செல்வத்தை ஈட்டி வருகின்றன.

    ஆனால் விளம்பரங்கள் என்ற பிராணவாயு இல்லாத பல சிற்றிதழ்கள் மறைந்துவிட்டன. 15 முதல் 20 ஆண்டுகள் வரை நடத்தப்பட்ட நல்ல பல இதழ்களும் நின்றுவிட்டன. நடத்திய ஆசிரியா்கள் கடனாளியாகவும் உள்ளனா். இதில் சிலா் காலமாகிவிட்டிருக்கிறாா்கள்.

    எனவே சிற்றிதழ்கள் தொடா்ந்துவெளிவரும் வகையில் தமிழக முதல்வா் செய்தித்துறை, தமிழ்வளா்ச்சித்துறை, சமூக நலத் துறை தமிழ்ப்பண்பாட்டுத்துறை விளங்பரங்களை 15 ஆண்டுகளுக்குமேல் நடத்திவரும் நல்லஇதழ்களுக்கு விதிமுறைகள் உருவாக்கி அளிப்பதால் தமிழ் மாநிலம் அமைந்த இந்நாளில் அந்த இதழ்களை வாழ அளிக்கும் பெரும் கொடையாகும் என்று தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai