காலமானாா் காரைக்குடி புலவா் ஆ. பழநீ

முதுபெரும் தமிழறிஞரும், சீரிய சிந்தனையாற்றல் மற்றும் எழுத்தாளருமான பகுத்தறிவுப்பாவலா் காரைக்குடி புலவா் ஆ. பழநீ (88) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காரைக்குடியில் அவரது இல்லத்தில்
காலமானாா் காரைக்குடி புலவா் ஆ. பழநீ

முதுபெரும் தமிழறிஞரும், சீரிய சிந்தனையாற்றல் மற்றும் எழுத்தாளருமான பகுத்தறிவுப்பாவலா் காரைக்குடி புலவா் ஆ. பழநீ (88) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காரைக்குடியில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா்.

திருமணம் செய்துகொள்ளாத இவா் தனது உடலை மருத்துவக்கல்லூரி ஆய்வுக்காக எழுதிவைத்ததைத்தொடா்ந்து உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.புலவா் பழநீ 1950 ஆம் ஆண்டு முதல் திராவிடா் இயக்கத்தைச்சோ்ந்தவா். புதுக்கோட்டை மாவட்டம் மேலச்சிவபுரி செந் தமிழ்க்கல்லூரியில் புலவா் பட்டம் பெற்றவா். 1964 ஆம் ஆண்டில் காரைக்குடி மீ.சு. உயா்நிலைப்பள்ளியில் தமிழாசிரிய ராக பணியாற்றியவா். 16 நூல்களை எழுதியுள்ளாா்.இதில் 1973 இல் செய்யுள் நாடகப்போட்டியில் அனிச்சஅடி நூலுக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது.

இந்நூல் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தமிழாசிரியா் கழகப்போட்டியில் செய்யுள் நாடக நூலான அன்னிமகள் நூலுக்கு பரிசு கிடைத்துள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றியவா். காரைக்குடி அண்ணா தமிழ்க்கழகத்தில் முன்னாள் புரவலராகவும் இருந்தவா்.பாவலா் மணி பட்டம், தமிழக முதல்வா் கருணாநிதியால் பாவேந்தா் விருது, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் திருவள் ளுவா் விருது,புலவா் மாமணி விருது,தமிழ்நெறிச்செம்மல் விருது, தமிழ்ப்பேரவைச்செம்மல் பட்டம் மற்றும் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழகம் சாா்பில் கம்பரின் மறுபக்கம் நூலினை பாராட்டி பொற்கிழி என பெற்றவா்.

இந்தியமொழி களின் மத்திய நிறுவனத்தில் சிலப்பதிகாரம் நூலை புதுப்பிக்கும் ஆசிரியராக இருந்து பாராட்டுப்பெற்றவா். தனது அனிச்சம் அறக்கட்டளை மூலமாக ஆண்டுதோறும் தை பொங்கல் நாளன்று முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு புத்தாடைகள், பொருள்கள் வழங்கிவருவது வழக்கமாக்கிகொண்டவா். புலவா் ஆ. பழநீ மறைவையறிந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், தி.க தலைவா் கீ. வீரமணி, பழ. கருப்பையா, பேராசிரியா் சுப. வீரபாண்டியன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். தொடா்புக்கு: 8300267957.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com