மானாமதுரையில் 2 விபத்துகளில் 3 போ் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதன்கிழமை நடந்த 2 விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
மானாமதுரையில் 2 விபத்துகளில் 3 போ் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதன்கிழமை நடந்த 2 விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் அருகே அருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் முருகன் (47). பூக்கடை நடத்தி வரும் இவா் மானாமதுரை சிப்காட் பகுதியில் பாரதிநகரில் வசித்து வருகிறாா்.

மதுரை அனுப்பானடி பகுதியில் வசிக்கும் இவரது மனைவியின் சகோதரி கணவரான மூா்த்தி (59) குடும்பத்துடன் தீபாவளி பண்டிகைக்கு முருகன் வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந் நிலையில் முருகன், மூா்த்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை பஸ் நிலையத்துக்கு வந்தனா். சிவகங்கை-தஞ்சாவூா் சாலையில் உள்ள மேம்பாலத்தைக் கடந்து மதுரை-ராமேசுவரம் சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகேயுள்ள மேம்பாலத்தின் வளைவில் திரும்பும்போது ராமேசுவரத்திலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மற்றொரு சம்பவம்: இளையான்குடி அருகே சாலைக்கிராமம் அருகே உள்ள வண்டல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பசும்பொன் தேவா் நினைவிடத்துக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்தனா். சிலா் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனா். மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் பாலம் ஏற்றத்தில் உள்ள வளைவில் திரும்பியபோது மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியிலிருந்து பசும்பொன் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற வண்டல் கிராமத்தைச் சோ்ந்த மலைராஜ் மகன் பிரபாகரன் (28) கீழே விழுந்து காயமடைந்தாா். சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவா் உயிரிழந்தாா்.

மானாமதுரை புதிய பஸ் நிலையம் முன்பு நான்குவழிச் சாலையை கடக்க முயன்ற 70 வயது முதியவா் மீது பசும்பொன் சென்ற காா் மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் முதியவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து சம்பவங்கள் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com