சுடச்சுட

  

  சிவகங்கையில் செப். 21-இல் பள்ளி மாணவர்களுக்கு பாரதி விழா போட்டிகள்

  By DIN  |   Published on : 13th September 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாரதி விழா போட்டிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
  இதுகுறித்து கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை நகர் தலைவர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு, பாரதி பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
  அந்த வகையில், இந்தாண்டிற்கான (2019) போட்டிகள் வரும் 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும், இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
  போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் செப். 28 ஆம் தேதி நடைபெறும் பாரதி விழாவில் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 98424 09522, 94435 75850 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai