சுடச்சுட

  

  சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் உள்ள அன்னை வீர மாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
  இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
  சிவகங்கை-மானாமதுரை சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு நிலையில் 21 வண்டிகளும், சின்ன மாடு நிலையில் 28 வண்டிகளும் பங்கேற்றன. 
  போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டிப் பந்தயத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai