Enable Javscript for better performance
காரைக்குடியில் 17-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் 17-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 14th September 2019 05:50 AM  |   அ+அ அ-   |    |  

    காரைக்குடி புத்தகத் திருவிழா குழு சார்பில், மாநில அளவிலான 17-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. 
    சுமார் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில், புத்தகத் திருவிழா குழு தலைவர் பேராசிரியர் அய்க்கண் தலைமை வகித்துப் பேசினார். திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழ் பேராசிரியர் ந. விஜயசுந்தரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, "புரட்டிப்போடும் புத்தகங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    விழாவில், முன்னாள் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், இந்தியன் வங்கி காரைக்குடி மண்டல மேலாளர் கி. வெங்கடரமணன், கம்பன் அறநிலைத் தலைவர் சக்தி அ. திருநாவுக்கரசு, தொழிலதிபர் பழ. படிக்காசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புத்தகத் திருவிழா குழு துணைத் தலைவர் பி.வி. சுவாமி, புத்தகத் திருவிழா குறித்து விளக்கிப் பேசினார். விழாவில் கம்பன் அறநிலைப் பொருளாளர் விஆர். சுப்பிரமணியன், காரைக்குடி புத்தகத் திருவிழா குழு பொருளாளர் வி. வெங்கடாசலம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    காரைக்குடி புத்தகத் திருவிழா குழு அமைப்புச் செயலர் முத்து. பழனியப்பன் வரவேற்றார். முடிவில், துணைத் தலைவர் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் நன்றி கூறினார்.
    முன்னதாக, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்திலிருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, காரைக்குடி டி.எஸ்.பி. அருண் தொடக்கிவைத்தார். இந்த ஊர்வலமானது, நூறடிச் சாலை வழியாக கம்பன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.
     

    kattana sevai