Enable Javscript for better performance
பிரான்மலை மங்கைபாகநாத தேனம்மை கோயில் மகா கும்பாபிஷேக விழா- Dinamani

சுடச்சுட

    

    பிரான்மலை மங்கைபாகநாத தேனம்மை கோயில் மகா கும்பாபிஷேக விழா

    By DIN  |   Published on : 14th September 2019 10:56 AM  |   அ+அ அ-   |    |  

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை மங்கைபாகநாத தேனம்மை கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் யாகசாலை பூஜையும், புதன் கிழமை நான்காவது மற்றும் ஐந்தாவது யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.  புதன்கிழமை ஆறாவது யாக சாலை பூஜை தொடங்கி காலை 9 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு  சிவாச்சாரிகள் புனித நீரை சுமந்து மங்கை பாகர், வடுக பைரவர், கொடுங்குன்ற நாதர்,  கோபுரங்களை அடைந்தனர். காலை 11 மணிக்கு மூலவர் சன்னதி கோபுரத்திற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் தலைமை சிவாச்சாரியார் உமாபாதி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.
    விழாவில் பிரான்மலை ஐந்து கிராம மக்கள்  சுவாமிக்கு சீர் கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் மங்கை பாகர்  தேனம்மை சுவாமிக்கு திருக்கல்யாண விழாவும், இரவு 9 மணிக்கு கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி அம்மன்,  விநாயகர், சுப்பிரமணியர், பிரியாவிடை அம்மன், சண்டிகேஷ்வரர் உற்சவ மூர்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. அன்னதான விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கும்பாபிசேக விழாவை காண மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    kattana sevai