Enable Javscript for better performance
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சங்கரபுஷ்கரணி குளத்தை மீண்டும் உருவாக்க அமைச்சரிடம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சங்கரபுஷ்கரணி குளத்தை மீண்டும் உருவாக்க அமைச்சரிடம் கோரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2019 05:51 AM  |   அ+அ அ-   |    |  

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி-சோமநாதர் சுவாமி கோயிலில் மறைந்துபோன சங்கர புஷ்கரணி தீர்த்தக்குளத்தை மீண்டும் உருவாக்கித் தரவேண்டும் என, தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.
    சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்றை ஒட்டி சங்கர புஷ்கரணி தீர்த்தக்குளம் இருந்துள்ளது. காலப்போக்கில் இந்தக் குளம் மறைந்துபோனது. தற்போது, கோயில் எதிரே வைகை ஆற்றை ஒட்டி தீர்த்தக் கிணறாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    எனவே, இக்கோயிலில் மீண்டும் சங்கர புஷ்கரணி தீர்த்தக்குளத்தை உருவாக்கித் தரவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    சில நாள்களுக்கு முன், சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் ராஜா, அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் ஆகியோர் தீர்த்தக்குளம் இருந்த இடத்தை பார்வையிட்டுச் சென்றனர். இதனிடையே, அறநிலையத் துறை, பொதுப்பணித் துறையின் தடையில்லாச் சான்று கிடைத்தால்தான் தீர்த்தக்குளத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
    இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜி. பாஸ்கரன் மானாமதுரை வந்து, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே கிணறு வடிவில் பராமரிக்கப்படும் சங்கர புஷ்கரணி தீர்த்தக்கிணறை பார்வையிட்டார். 
    அப்போது அமைச்சரிடம், இந்த தீர்த்தக்குளத்தின் சிறப்புகள் குறித்தும், வைகை ஆற்றுக்குள் மறைந்துபோன இந்தக் குளத்தை மீண்டும் புதிதாக உருவாக்கித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அமைச்சருடன், சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன், பேரூராட்சிச் செயல் அலுவலர் குமரேசன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் ஜெயபிரகாஷ், பாஜக நகர் தலைவர் சங்கரசுப்ரமணியன், கோயில் பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணிபட்டர், தேவஸ்தான மானாமதுரை சரக கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp