அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான தொடர்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் பி.எஸ்சி.,(ஐ.டி), எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தொடர்பு வகுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் பி.எஸ்சி.,(ஐ.டி), எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தொடர்பு வகுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. 
அதன்படி, கல்வியாண்டு 2017-2018, காலண்டர் ஆண்டு 2017 மற்றும் 2018 (பருவமுறையல்லாத) பி.எஸ்சி. (ஐ.டி) மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளிலும், பி.எஸ்சி. (ஐ.டி-எல்.இ) இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளிலும், பல்கலைக்கழக அறிவியல் வளாக கீழ்தளத்தில் உள்ள கணினியியல் துறையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
அதேபோல், கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. பொது, ஐ.பி.பி அண்ட் எப்.பி.எம், ஹெச்.எம்., சுற்றுலா, இ.எம், ஹெச்.ஆர்.எம். ஆகிய நான்காம் பருவ மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் செப்டம்பர் 18 முதல் 21 வரை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்று, தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com