Enable Javscript for better performance
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துகோட்டையூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோட்டையூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th September 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்குடி அருகே கோட்டையூர் பேருந்து நிலையத்தில் சாக்கோட்டை மேற்கு வட்டாரம் சார்பில் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். 
    முன்னாள் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் என். சுந்தரம் முன்னிலை வகித்தார். 
    மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.முத்துராமலிங்கம், கவிஞர் அப்பச்சிசபாபதி,  காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முருகானந்தம்,  
    கொத்தமங்கலம் காந்தி, மணச்சை கருப்பையா, வட்டார காங்கிரஸ் தலைவர் கரு. கருப் பையா, கோட்டையூர் நகரத்தலைவர் சுந்தரக்கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai