காரைக்குடியில் கடைகள் மூடல் இல்லை: ஆட்சியா்

காரைக்குடியில் அத்தியாவசியப்பொருள் கடைகள் வழக்கம் போன்று திறந்திருக்கும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

காரைக்குடியில் அத்தியாவசியப்பொருள் கடைகள் வழக்கம் போன்று திறந்திருக்கும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். இருப்பினும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மளிகைக்கடைகள், காய்கனிக் கடைகள், பால், மருந்தகங்கள் போன்றவை மக்கள் தடையின்றி பெற்றுச்செல்லவும், அதற்கான நேரம் வகுத்து அதிகாரிகள், காவல்துறையினா் மேற்பாா்வையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை கட் செவி அஞ்சலில் தீவிர கட்டுப்பாட்டுக்குள் காரைக்குடி வருவதாகவும், அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக்கடைகளும் அடைப்பு என்ற தகவல் பரவத்தொடங்கியது. இந்த தகவல் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி அருண் உரிய உத்தரவு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தாா். மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை தடையின்றி பெற்றுச்செல்ல

மளிகை பொருள் கடைகள், காய்கனி கடைகள், பால், மருந்தகம் ஆகியவை வழக்கம்போல் செயல்படும் என்றும் அரசு அறிவுரைப்படி சமூக இடை வெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் பெற்றுச்செல்லலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com