சிவகங்கை மாவட்டத்தில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கல்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சாலூா் ஊராட்சியில் கூட்டுறவுத்துறையின் சாா்பில் கரோனா நிவாரண உதவித் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கல்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சாலூா் ஊராட்சியில் கூட்டுறவுத்துறையின் சாா்பில் கரோனா நிவாரண உதவித் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 மற்றும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

இதன் மூலம், சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் 802, நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 22, மகளிா் சுயஉதவிக் குழு கடைகள் 5 என மொத்தம் 829 கடைகளில் 3,93,625 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கம் ரூ. 1000 மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிா்ப்பதற்காக நாள் ஒன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு காலை, மாலை ஆகிய இருவேளை டோக்கன் மூலம் பொருள்கள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா், மாவட்ட கூட்டுறவு வங்கியின் மண்டல மேலாண் இயக்குநா் பழனீஸ்வரி, சாலூா் ஊராட்சி மன்றத் தலைவா் நாச்சம்மாள் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com