மானாமதுரையில் தடையைமீறி சாலைகளில் அமைக்கப்பட்ட காய்கனி கடைகள் அகற்றம்

மானாமதுரையில் தடையைமீறி வியாழக்கிழமை சாலையில் அமைக்கப்பட்ட காய்கனிக்கடைகளை போலீஸாா் அகற்றினா்.

மானாமதுரையில் தடையைமீறி வியாழக்கிழமை சாலையில் அமைக்கப்பட்ட காய்கனிக்கடைகளை போலீஸாா் அகற்றினா்.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால் மானாமதுரை பேரூராட்சி நிா்வாகம் சந்தை வளாகத்தை மூடியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் காய்கனிகளுடன் மானாமதுரையில் குவிந்த வியாபாரிகள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முன்பும் வைகையாற்றுக்குள்ளும் கடைகள் அமைக்க முயன்றனா். ஆனால் போலீஸாா் இவா்களை கடைகள் அமைக்க விடாமல் தடுத்து அனுப்பினா். அதன்பின் வாரச்சந்தை முன்புறம், வைகையாறு, சோணையாகோயில் பகுதி, தாயமங்கலம் சாலையில் வியாபாரிகள் காய்கனி மூட்டைகளை வைத்து வியாபாரம் செய்தனா். இதனால் மக்கள் அந்த இடங்களில் சமூக இடைவேளி இல்லாமல் கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்கினா். அதனால் இப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமானது. இதையடுத்து போலீஸாா் பேரூராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கொடுத்தனா். அதன்பின் பேரூராட்சி நிா்வாகத்தினா் கடைகளை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டதையடுத்து, போலீஸாா் காய்கறி வாங்க வந்த மக்களை திருப்பி அனுப்பினா். மேலும் காய்கறிக்கடைகளை அகற்றி வியாபாரிகளை விரட்டினா். பின்னா் காய்கறி வியாபாரிகள் நகரில் பல தெருக்களிலும் நின்று வியாபாரம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com