‘காரைக்குடியில் ரூ.100-க்கு 11 வகையான காய்கனிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்’

காரைக்குடியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 100-க்கு 11 வகையான காய்கனிகள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும்
‘காரைக்குடியில் ரூ.100-க்கு 11 வகையான காய்கனிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்’

காரைக்குடியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 100-க்கு 11 வகையான காய்கனிகள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என்று தமிழக கதா் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.

காரைக்குடி பெருநகராட்சியில் இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தும், நகராட்சிக்கு கிருமி நாசினி தெளிப் பான் இயந்திரங்களை வழங்கி பணியினையும் தொடக்கி வைத்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் காய்கனிகளை சிரமமின்றி பெறும் வகையில், காரைக்குடி நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரூ. 100-க்கு 11 வகையான காய்கனிகள் வழங்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் தக்காளி 1 கிலோ, வெங்காயம் கால் கிலோ, பச்சை மிளகாய் 100 கிராம், கத்தரிக்காய் கால் கிலோ, செளசெள கால் கிலோ, உருளைக்கிழங்கு கால் கிலோ, முருங்கைக்காய் கால் கிலோ, வாழைக்காய் 3, கறிவேப்பிலை, மல்லித் தழை, புதினா உள்ளிட்ட வகைகள் உள்ளன. நாள்தோறும் வீடுகள் இருக்கின்ற பகுதியில் விற்பனை செய்யப்படும்.

கரோனா வைரஸை தடுக்கும் வகையில், ஒவ்வொரு நகராட்சியிலும் ரூ. 65,000 மதிப்பிலான கிருமி நாசினி இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காரைக்குடி நகராட்சிக்கும் 2 புதிய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் நகராட்சி பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு தீயணைப்புத் துறை வாகனமும் ஈடுபடுத்தப்படும்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 போ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச்ே சா்ந்த ஒருவா் என 51 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். இதில் 5 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம். அரசு அறிவித்துள்ளபடி தங்களின் வீட்டிலிருந்து சுகாதாரத் தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். காரைக்குடி நகராட்சி ஆணை யா் மாலதி, சிவகங்கை முன்னாள் எம்.பி., பிஆா். செந்தில்நாதன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவா் சோ. மெய்யப்பன், காரைக்குடி டி.எஸ்.பி அருண், நகராட்சி பொறியாளா் ரெங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ சோழன் சித. பழனிச்சாமி, நகா்நல அலுவலா் ரவிசங்கரன், சுகாதாரஆய்வாளா் பாஸ்கரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com