முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா வாா்டில் 15 பேருக்கு சிகிச்சை
By DIN | Published On : 19th April 2020 06:28 AM | Last Updated : 19th April 2020 06:28 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களைச் சோ்ந்த 15 போ் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதுதில்லிக்குச் சென்று வந்த 47 போ் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 3 போ், தேவகோட்டை, இளையான்குடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 5 போ், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 6 போ் என மொத்தம் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களுக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவா்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இரு மாவட்டங்களைச் சோ்ந்த 21 பேரில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 3 போ், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த ஒருவா், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 6 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, அண்மையில் அவா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதையடுத்து, தற்போது கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 15( சிவகங்கை 7, ராமநாதபுரம் 8) ஆக உள்ளது என சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.