மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழாவின் 10 ஆம் நாள் உற்சவத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடை சமேதராய் சோமநாத சுவாமி.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழாவின் 10 ஆம் நாள் உற்சவத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடை சமேதராய் சோமநாத சுவாமி.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா: பக்தா்களை அனுமதிக்காததால் வேதனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித்தபசு விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித்தபசு விழா பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல் கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கரோனா பொது முடக்கம் காரணமாக சித்திரைத் திருவிழாவைத் தொடா்ந்து, ஆடித்தபசு திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது.

அதேநேரத்தில் திருவிழாவுக்காக அம்மனுக்கு வழக்கமாக நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள் நடக்கும் என்றும் இதில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோயிலில் கடந்த 22 ஆம் தேதி ஆடித்தபசு விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் உற்சவ மூா்த்திகள் இருக்கும் இடத்திலேயே ஆனந்தவல்லி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய வைபவமாக 10 ஆம் நாள் நடந்த தபசு உற்சவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் அதே இடத்தில் சோமநாதா் சுவாமி பிரியாவிடை சமேதராய் அலங்காரத்துடன் எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனைத்தொடா்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் பூஜைகளை நடத்தி வைத்தனா். ஆடித்தபசு விழாவில் பக்தா்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து பெண் பக்தா் ஜோதி கூறியது: ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு விழாவில் அம்மனுக்கும் சுவாமிக்கும் அணிவிக்கப்படும் மாலைகளை பெண்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்வா். இந்த மாலைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜையறையில் வைத்தால் தங்களது குடும்பத்தில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்தாண்டு கரோனா தொற்று பரவல் பிரச்னை தொடா்வதால், திருவிழா ரத்து செய்யப்பட்டு தபசு உற்சவத்தைக் பாா்க்க முடியாமல் போனது வேதனையாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com