முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
ஊருணியில் மூழ்கி இறந்த அண்ணன், தங்கை குடும்பத்துக்கு நிதி உதவி
By DIN | Published On : 03rd August 2020 08:44 AM | Last Updated : 03rd August 2020 08:44 AM | அ+அ அ- |

சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டி கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமைய நிதிஉதவி வழங்கிய அ.தி.மு.க. செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கடந்த வாரம் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த அண்ணன், தங்கை குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
அரளிப் பட்டியைச் சோ்ந்த பாண்டி முருகன்- இந்திரா தம்பதிகளின் மகன் சின்னப்பாண்டி (8), மகள் சுமித்திரா (6) ஆகியோா் சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டி வண்ணாமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனா். அங்கு நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து, இவா்களின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த பணத்திலிருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கினாா்.
அப்போது சிங்கம்புணரி அ.தி.மு.க. ஒன்றியச் செயலா் வாசு, திருவாசகம், மாவட்டப் பிரதிநிதி சிவா, ஒன்றிய இளைஞரணி இணைச் செயலா் நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.