மானாமதுரை அருகே காவல்துறையினர் பாதுகாப்புடன் கால்வாய்  தூர்வாரும் பணி

மானாமதுரை அருகே கீழமேல்குடி கால்வாயில் போலீஸ் பாதுகாப்புடன் தூர்வாரும் பணி நடைபெற்றது.
மானாமதுரை அருகே காவல்துறையினர் பாதுகாப்புடன் கால்வாய்  தூர்வாரும் பணி
மானாமதுரை அருகே காவல்துறையினர் பாதுகாப்புடன் கால்வாய்  தூர்வாரும் பணி

மானாமதுரை அருகே கீழமேல்குடி கால்வாயில் போலீஸ் பாதுகாப்புடன் தூர்வாரும் பணி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை காவல்துறையினர் பாதுகாப்புடன் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. மானாமதுரை ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தின் பாசனக் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாயின் ஒரு பகுதியை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த வாரம் இந்த கிராம மக்கள் கால்வாயை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது ஆக்கிரமிப்பு பகுதி எனக்கூறப்படும் இடத்திலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அங்கு வந்த காவல்துறையினர் பிரச்சனைக்குரிய கால்வாய் பகுதியில் தூர்வாரக்கூடாது எனக்கூறி கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர்.

அதன்பின் மானாமதுரை வட்டாட்சியரிடம் கீழமேல்குடி கிராம மக்கள் இது குறித்து முறையிட்டனர். அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்வாய் பணி காவல்துறையினர் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டது. தூர்வாரும் பணி நடைபெறும் இடத்தில் காவல்துறையினரும் வருவாய்துறையினரும் முகாமிட்டிருந்தனர்.

இது குறித்து மானாமதுரை வட்டாட்சியர் கூறும்போது  “கீழமேல்குடி கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதி என சுட்டிக்காட்டப்படும் இடத்தில் தற்போது தூர்வாரும் பணி நடைபெறவில்லை. மற்ற பகுதியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரும் பணி நிறைவடையும் நிலையில் கிராம மக்கள் தெரிவிக்கும் ஆக்கிரமிப்பு கால்வாய் பகுதியில் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்படும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com