கரோனா: காரைக்குடியில் முழுப் பொதுமுடக்கம்

கரோனா தீநுண்மி பரவலைத்தடுக்க தமிழகஅரசு அமல்படுத்திய முழுப் பொதுமுடக்கத்தால் காரைக் குடியில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி இருந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முழுப்பொதுமுடக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச் சோடிய நிலையில் செக்காலைச்சாலையின் ஐந்துவிளக்குப்பகுதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முழுப்பொதுமுடக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச் சோடிய நிலையில் செக்காலைச்சாலையின் ஐந்துவிளக்குப்பகுதி

காரைக்குடி: கரோனா தீநுண்மி பரவலைத்தடுக்க தமிழகஅரசு அமல்படுத்திய முழுப் பொதுமுடக்கத்தால் காரைக் குடியில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி இருந்தன.

கரோனா தொற்று பரவலைத்தடுக்க தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழுப்பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் பால், மருந்து, செய்தித் தாள் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

காரைக்குடி செக்காலைச்சாலை, கல்லூரிச்சாலை, ரயில்வே சாலை, 120 அடிச்சாலை, நூறடிச்சாலை, முடியரசன் சாலை, வ.உ.சி சாலை, கல்லுக்கட்டி வீதிகள், கோவிலூா் சாலை மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து காரைக்குடி நகருக்குள் வரும் பல்வேறு சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை முழுப்பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியிருந்தன.

கடைகள் எதுவும் திறக்கவில்லை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சுப முகூா்த்த நாள் என்பதால் ஆங்காங்கே திருமணங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இரண்டு மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் சென்றுவந்தனா். மற்றபடி மக்கள் வெளியில் நடமாட்டமின்றி வீடுகளில் முடங்கிக்கிடந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com