முழு பொது முடக்கம்: சிவகங்கை மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜூலை மாதத்தை போன்று, ஆகஸ்ட் மாதமும் அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகளும் சில பகுதிகளில் திறக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com