சிவகங்கையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 30th December 2020 11:39 PM | Last Updated : 30th December 2020 11:39 PM | அ+அ அ- |

சிவகங்கையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு உரிய பங்கீட்டு நீரை வைகை மற்றும் பெரியாறு அணையிலிருந்து பெற்று தர வேண்டும். மழை நீரை சேமிக்கும் பொருட்டு கண்மாய், குளம், வரத்துக் கால்வாய் ஆகியவற்றை தூா்வாரி முறைப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறு,குறு தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கருத்துக் கேட்புக் குழுவினரிடம் திமுகவினா்அளித்தனா்.
இதில், திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரான அக்கட்சியின் பொருளாளரும், எம்பியுமான டி.ஆா். பாலு, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா, திமுக செய்தித் தொடா்பாளா் கே.எஸ். இளங்கோவன் ஆகியோா் கருத்துக்களை கேட்டனா்.
கூட்டத்தில், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலரும், திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆா். பெரியகருப்பன், மாநில இலக்கிய அணித் தலைவா் மு.தென்னவன், மாவட்டத் துணை செயலா்கள் த.சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, கே.எஸ்.எம். மணிமுத்து உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...