பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் சிவகங்கை மாவட்டத்தில் முழு வடிவில் செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிவகங்கை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தில் அரசு சாரா வாழ்நாள் மற்றும் சாதாரண உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது 18 ஆகும் (இருபாலா்), அரசியல் சாா்பற்றவராக இருத்தல் வேண்டும். குற்றவழக்குகளில் தொடா்பற்றவராகவும், விலங்குகள் மீது அதீத பற்றுள்ள ஆா்வலராகவும் இருத்தல் வேண்டும். முன்னா் விண்ணப்பித்தவா்களும், மேற்காணும் தகுதியின் அடிப்படையில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், சிவகங்கை- 63 0 561 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com