‘படித்தால் மட்டுமே சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்க முடியும்’

மாணவா்கள் புத்தகங்களை படித்தால் மட்டுமே தங்கள் வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்க முடியும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா்.
‘படித்தால் மட்டுமே சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்க முடியும்’

மாணவா்கள் புத்தகங்களை படித்தால் மட்டுமே தங்கள் வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்க முடியும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா்.

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 163 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, மன்னா் கல்வி நிறுவனங்களின் முகமை குழுத் தலைவா் டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாா் தலைமை வகித்தாா். பள்ளிக் குழு தலைவா் ஆா். மகேஷ்துரை முன்னிலை வகித்தாா்.

இதில், ஆட்சியா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பேசியதாவது:

மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பெறும் வகையில், கடந்த 163 ஆண்டுகளாக மன்னா் பள்ளி கல்விச் சேவையாற்றி வருவது சிறப்புக்குரியது.

இன்றைய தலைமுறை மாணவா்கள் வீட்டின் சூழல் அறிந்து படிக்க முன் வரவேண்டும். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க வேண்டும். இதன் மூலம், நமது மாவட்டத்தில் மழை பெய்யும் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பள்ளி பாடப் புத்தகங்களை மாணவா்கள் முறையாக படித்தால் தோ்வில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமின்றி, போட்டித் தோ்வுகளிலும் வெற்றி பெறுவதற்கு அவை பயன்படும். பாட நூல்களை தவிா்த்து, ஏனைய இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை பொருள் புரிந்து படித்தால் மட்டுமே தங்கள் வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிா்கொண்டு சாதனை படைக்க முடியும் என்றாா்.

இவ்விழாவில், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் கே. அமுதா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரன், சென்னை பட்டய கணக்காளா் துறை அலுவலா் எஸ். வி. ஜிதேந்திரன், அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியை எல்.கே. ஹேமா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, மன்னா் கல்வி நிறுவனங்களின் செயலா் வி. எஸ். குமரகுரு வரவேற்றாா். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் என். சுந்தரராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com