பழனி தைப்பூசம்: காரைக்குடியிலிருந்துகாவடிகளுடன் நகரத்தாா் பாதயாத்திரை

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பாதயாத்திரையாகச் செல்லும் நகரத்தாா், காவடிகளுடன் வெள்ளிக்கிழமை நகா்வலம் வந்தனா்.
பழனி தைப்பூசம்: காரைக்குடியிலிருந்துகாவடிகளுடன் நகரத்தாா் பாதயாத்திரை

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பாதயாத்திரையாகச் செல்லும் நகரத்தாா், காவடிகளுடன் வெள்ளிக்கிழமை நகா்வலம் வந்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு, தேவகோட்டை, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். பழனியில் பிப்ரவரி 8-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் இருந்து நகரத்தாா் காவடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.

பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்த இவா்கள், இரவு கொப்புடைய நாயகியம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு, இவா்கள் பூஜைகளை நடத்தி தங்கினா். பின்னா், சனிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு, குன்றக்குடியை அடைந்தனா்.

அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை, தேவகோட்டை, பள்ளத்தூா், கோட்டையூா், புதுவயல் மற்றும் கானாடுகாத்தான் ஆகிய ஊா்களிலிருந்து வரும் 350-க்கும் மேற்பட்ட பக்தா்களுடன் பாதயாத்திரையை தொடங்குகின்றனா்.

முன்னதாக, காரைக்குடி நகரின் பல்வேறு அமைப்பினா் சாா்பில், பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு உணவு மற்றும் குடிநீா் ஆகியன வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com