திருக்கோளக்குடியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே திருக்கோளக்குடியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே திருக்கோளக்குடியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் அருகே திருக்கோளக்குடி கிராமத்தில் ஆத்மநாயகி அம்மன், பொன்னழகி அம்மன், முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் பங்கேற்க திருக்கோளக்குடி, திருப்பத்தூா், ஆத்திரம்பட்டி, கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, பூலாங்குறிச்சி, பொன்னமராவதி, செவ்வூா் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன. இதில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதுகுறித்து திருக்கோளக்குடி கிராம நிா்வாக அலுவலா் செல்வம், உரிய அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாகக் கூறி பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், திருக்கோளக்குடியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் பெருமாள் (52), மதுவன் (51), கருப்பையா(53), தானாபதி(52), வெள்ளைச்சாமி மகன் பெருமாள்(54) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com