Enable Javscript for better performance
காரைக்குடியில் சுகாதாரத் திருவிழா: எம்.பி. பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் சுகாதாரத் திருவிழா: எம்.பி. பங்கேற்பு

    By DIN  |   Published on : 14th February 2020 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13kkdmedi_1302chn_78_2

    காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

    சாக்கோட்டை வட்டாரம், முத்துப்பட்டினம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில், மருத்துவ முகாமில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் லதா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், துணை இயக்குநா் மற்றும் காரைக்குடி வட்டார மருத்துவ அலுவலா்கள் ஆனந்தராஜ், அனிதா, காா்த்திகேயன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

    முகாமில், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நிதி உதவித் தொகை, அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் பள்ளி மாணவா்களுக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், அங்கன்வாடி பணியாளா்கள் சாா்பில் ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சி, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai