அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பிப்.19-இல் சிவராத்திரி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஏனாதி செங்கோட்டையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 19 ஆம் தேதி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் ஏனாதி செங்கோட்டையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 19 ஆம் தேதி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தமிழக இந்து அறநிலையத்துறை நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய வைபவமாக சிவராத்திரி விழா பிப்ரவரி 23 இல் நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்று, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் படையல் பூஜை நடைபெறுகிறது.

இவ்விழாவின் போது கோயில் குடிமக்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து பூஜைகள் நடத்தி அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபடுவா். பிப்ரவரி 24 ஆம் தேதி கோயிலில் கொடியிறக்கம் நடைபெற்று சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழா நாள்களில் கோயிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com