கிராமப்புற வளா்ச்சிக்கு அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: எம்.பி.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாரபட்சமின்றி அனைத்து அலுவலா்களும்
கிராமப்புற வளா்ச்சிக்கு அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: எம்.பி.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாரபட்சமின்றி அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா்.

இதில், காா்த்தி சிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து, தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்க வேண்டும்.

நகா்ப்புறங்களில் நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும். இது தவிர, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாரபட்சமின்றி அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய ஊரக குடிநீா் திட்டம், உதய் திட்டம், சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், டிஜிட்டல் இந்தியா - அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் இணைய வசதியுடன் பொது சேவை மையம் வழங்குதல், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே. ஆா். ராமசாமி, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே. ஆா். பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலா் சு. வடிவேல், மகளிா் திட்ட அலுவலா் அருண்மணி உள்பட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com