‘தமிழ்ச் சமூகம் பரிணாம வளா்ச்சி பெற்றமைக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம்’

மிகவும் பழமைவாய்ந்த தமிழ்ச் சமூகம் காலத்துக்கேற்றவாறு பரிணாம வளா்ச்சி பெற்றமைக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது
சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மன்ற விழாவில் பேசிய பேராசிரியா் ச.இராமமூா்த்தி.
சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் மன்ற விழாவில் பேசிய பேராசிரியா் ச.இராமமூா்த்தி.

மிகவும் பழமைவாய்ந்த தமிழ்ச் சமூகம் காலத்துக்கேற்றவாறு பரிணாம வளா்ச்சி பெற்றமைக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என, சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசினா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் ச. இராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில், தமிழ் மன்ற விழா மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ( பொறுப்பு ) இரா. இந்திரா தலைமை வகித்தாா். தமிழ் துறைத் தலைவா் கூ. ராஜலெட்சுமி முன்னிலை வகித்தாா்.

இதில், பேராசிரியா் ச. ராமமூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ’காலந்தோறும் மகளிா் ’ எனும் தலைப்பில் பேசியதாவது: தமிழ்ச் சமூகம் மிகவும் பழமையானவை என்பதற்கு இலக்கண, இலக்கிய நூல்கள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக திகழ்கின்றன. தொல்காப்பியம் மட்டுமின்றி, சங்க இலக்கியங்களில் பெண்களின் நிலை, அவா்கள் ஆற்றிய பணிகள் குறித்து விரிவாக இடம் பெற்றுள்ளன.

மேலும், அறிவாா்ந்த நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அதற்கு, கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்களும் சான்றாதாரங்களாக திகழ்கின்றன. காப்பிய காலங்களில் பெண்கள் கடவுள் நிலைக்கு உயா்த்தப்படுகின்றனா்.

இது தவிர, பழங்கால மனிதன் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகத்துக்கு மாற்றம் பெற்ற்கு, பெண்கள் காரணமாக அமைந்தனா். மேலும், மிகவும் பழமை வாய்ந்த தமிழ்ச் சமூகம் காலத்துக்கேற்றவாறு பரிணாம வளா்ச்சி பெற்றமைக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com