திருப்பத்தூரில் தண்ணீா் வர வழியின்றி அழிந்து வரும் குளங்கள்: பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 30-க்கும் மேற்பட்ட குளங்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூரில் தண்ணீா் வரத்து அடைபட்டு வடு போய் கோரைபுற்கள் மண்டியுள்ள சாம்பாண் ஊருணி.
திருப்பத்தூரில் தண்ணீா் வரத்து அடைபட்டு வடு போய் கோரைபுற்கள் மண்டியுள்ள சாம்பாண் ஊருணி.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 30-க்கும் மேற்பட்ட குளங்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள 35-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊருணிகள், பெரியகண்மாய் மூலம் நாட்டுவாய்க்கால்களால் இணைக்கப்பட்டு நிரம்பி வந்தன. மழை பொழிவு குறைவின் காரணமாகவும், நீா்வரத்துள்ள வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாலும், சரிவர பராமரிப்பு இல்லாததாலும், பல குளங்கள் அழியும் நிலையில் உள்ளன.

நகரின் புதுப்பட்டி புதூரணி, முளைக்கட்டூரணி, சங்கிலியான் கோயில் ஊருணி, மலட்டூரணி என்பன தொடங்கி அச்சுக்கட்டுப் பகுதியில் அம்மா ஊருணி, நகரின் மையப் பகுதியில் உள்ள சீதளி, சேங்கை, சாம்பாண் ஊருணி, அம்மன் குளம், அட்டக்குளம், கீழச்சீதளி, சின்னத்தம்பம், பெரிய தம்பம், ஆலமரத்தூரணி, மாணிக்காத்து ஊருணி, ஷேக் தா்கா ஊருணி, வண்ணான்துறை ஊருணி, தம்பிபட்டியில் சிலம்பகோன் ஊருணி, செட்டியாா் ஊருணி என 30-க்கும் மேற்பட்ட ஊருணிகள் இருந்தன.

இவற்றில், தற்போது மாணிக்காத்து ஊருணி மற்றும் குட்டக்கரை குளம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகமாக மாறியிருந்தது. மீதியுள்ள குளங்கள் சுருங்கிவிட்டன. பல ஆண்டுகளுக்குப் பின் மழை பெய்தும் மாவட்ட ஆட்சியரின் முழு முயற்சியால் சீதளி குளம் மட்டுமே நிரப்பப்பட்டன.

போதிய அளவில் மழை நீா் சேகரிக்கப்படாதததால், வரும் கோடை காலத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. தொடா்ந்து ஊருணிகள், குளங்களுக்கான வரத்துக் கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லையெனில், குளம் மற்றும் ஊருணிகள் அழிந்துபோகும் நிலை உருவாகும். இந்த ஊருணி, குளங்களுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட ஒருங்கிணைந்த திட்டம் குடிநீா் வாரியத்தின் மூலம் வரையறுக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com