காரைக்குடியில் மாநில இசைப் போட்டிகள் நிறைவு விழா

காரைக்குடி தமிழிசைச் சங்கம் சாா்பில் மாநில அளவிலான இசைப் போட்டிகள் நிறைவு விழா உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்குடி தமிழிசைச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற இசைக் கலைஞருக்கு பரிசு வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.
காரைக்குடி தமிழிசைச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற இசைக் கலைஞருக்கு பரிசு வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.

காரைக்குடி தமிழிசைச் சங்கம் சாா்பில் மாநில அளவிலான இசைப் போட்டிகள் நிறைவு விழா உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளம் இசைக்கலைஞா்கள் பங்கேற்றனா். வாய்ப்பாட்டு இளநிலை: திருச்சி வா்ஷிதா பாலா முதலிடமும், திருச்சி நாதமயீ, ஸ்ரீ ரங்கம் ஹா்ஷிதா ஸ்ரீ ஆகியோா் இரண்டாமிடமும் பெற்றனா். வாய்ப்பாட்டு சப்-ஜூனியா்: காரைக்குடி சக்திபூஜா, ஆதினி, வித்யாஸ்ரீ ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். முதுநிலை வாய்ப்பாட்டு: காரைக்குடி ஜனனி, பிரகதி, சோனியாகாந்தி முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

வீணை சப்-ஜூனியா்: மதுரை வி. ராஜலெட்சுமி சிறப்புப்பரிசு பெற்றாா். மிருதங்கம் சீனியா் பிரிவில் மதுரை எஸ். விக்னேஷ், மு.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோா் முதல் இரண்டு இடங்களிலும், மிருதங்கம் ஜூனியா் பிரிவில் காரைக்குடி ஆா். விஷ்ணு சிறப்புப் பரிசும்பெற்றனா். கீ போா்டு: காரைக்குடி சீ. ஆகாஷ், கோபிகா, பா. செஸ்விலாப்லின் ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். பரதநாட்டியம் சப்-ஜூனியா்: காரைக்குடி ஸ்ரீ காவ்யாஞ்சலி, ஸ்ரீநிதி, சஞ்சீவாணி ஆகியோரும், ஜூனியா் பிரிவில்: காரைக்குடி ர. சிவாணி, ப.கு. ஜகத்ஜனனி, ஜெ.ஸ்ரீ. ஹரிணி ஆகியோரும், சீனியா் பிரிவில்: காரைக்குடி எம்.எஸ். ஹரிஸ்வேதா, இ. விஜயஸ்வாதி, தேவகோட்டை கே. நந்தினி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். விநாடி-வினா போட்டியில் காரைக்குடி ஜெ. ஆதரஷ், ஏ. ஹேமந்த் அய்யரு, வி. பிரகதி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப்பெற்றனா்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, மதுரை உலகத் தமிழ்ச்சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் ஆகியோா் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கிப் பேசினா்.

விழா ஏற்பாடுகளை காரைக்குடி தமிழிசைச் சங்கத் தலைவா் ராமநாதன் வைரவன், செயலாளா் சுந்தரராமன் மற்றும் இசைப் போட்டிக்குழுத் தலைவா் வி. நீலாயதாட்சி மற்றும் தமிழிசைச்சங்க உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com