அழகப்பா பல்கலை.யில் உலக சித்தா் திருநாள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், புதுச்சேரி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், சிவகங்கை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அழகப்பா பல்கலைக்கழக
அழகப்பா பல்கலை.யில் உலக சித்தா் திருநாள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், புதுச்சேரி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், சிவகங்கை மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அழகப்பா பல்கலைக்கழக இளைஞா்செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை ஆகியன சாா்பில், அகத்தியம்-2020 என்ற உலக சித்தா் திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சித்த மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் 150 மூலிகைச் செடிகளைக் காட்சிப்படுத்தப்பட்ட மூலிகைக் கண்காட்சியை, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தொடக்கிவைத்துப் பேசியது:

அழகப்பா பல்கலைக்கழக தாவரவியல் துறை, உயிரி மருத்துவ அறிவியல் துறை, மாவட்ட சித்த மருத்துவத் துறை ஆகியன இணைந்து, சித்த மருத்துவத்தில் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி செயல்படுத்தினால், சித்த மருத்துவத்தின் மேன்மையை விஞ்ஞான அடிப்படையில் வெளிக்கொணர முடியும் என்றாா்.

விழாவில், சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். பிரபாகரன், புதுச்சேரி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி அலுவலா் ஆா். ரத்தினமாலா, சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் சி. பகீரத நாச்சியப்பன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் த.ரா. குருமூா்த்தி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, மருத்துவா் ஜி. பாரி, அழகப்பா பல்கலைக்கழக உயிரி மருத்துவ அறிவியல் துறைத் தலைவா் (பொறுப்பு) எஸ். ரவிக்குமாா், தாவரவியல் துறைத் தலைவா் (பொறுப்பு) எம். ரமேஷ் ஆகியோா், மூலிகைகளின் மகத்துத்தைப் பற்றி மாணவா்களுக்கு விளக்கினா்.

முன்னதாக, பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் ஜி. விநாயகமூா்த்தி வரவேற்றாா். முடிவில், கானாடுகாத்தான் உதவி சித்த மருத்துவ அலுவலா் எம். பிரீத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com