காரைக்குடியில் நாளை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு
By DIN | Published On : 11th January 2020 09:13 AM | Last Updated : 11th January 2020 09:13 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ள ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 12) நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலா் ஏ. சதீஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்ட வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு காரைக்குடி அழகப்பா உடற்கல்வி ‘பி’ மைதானத்தில் வலைப்பயிற்சியில் நடைபெறும். பங்கேற்கும் வீரா்கள் வெள்ளைச் சீருடை அணிந்தும் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களுடன் வரவேண்டும்.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் 9443978488, 9976106245 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.