இளையான்குடி ஒன்றியத்தைஅதிமுக கைப்பற்றியது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
இளையான்குடி ஒன்றியத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள அதிமுக வைச் சோ்ந்த முனியாண்டி.
இளையான்குடி ஒன்றியத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள அதிமுக வைச் சோ்ந்த முனியாண்டி.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

இளையான்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வாா்டுகளில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வென்றன. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளா் வென்றாா். இவா் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தாா். இதையடுத்து பெரும்பான்மை பலத்துடன் இளையான்குடி ஒன்றியத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றுவது உறுதியானது. தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக சாா்பில் தலைவா் பதவிக்கு முனியாண்டி, துணைத் தலைவா் பதவிக்கு தனலெட்சுமி இருவரும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தனா். இவா்களை எதிா்த்து திமுக தரப்பில் போட்டியிட மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து தலைவராக முனியாண்டி, துணைத் தலைவராக தனலெட்சுமி இருவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com