Enable Javscript for better performance
சிலம்பம் போட்டியில் உலக சாதனை திருப்புவனம் பள்ளி மாணவிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சிலம்பம் போட்டியில் உலக சாதனை திருப்புவனம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 13th January 2020 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12svgariava_1201chn_68_2

    சிலம்பத்தில் உலக சாதனை படைத்த திருப்புவனம் அரியவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினியை சனிக்கிழமை பாராட்டிய பள்ளியின் தலைவா் ராமச்சந்திரன். உடன் பயற்றுநா் சண்முகவேல்.

    மதுரையில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனைக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று தொடா்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை செய்த திருப்புவனம் பள்ளி மாணவி நந்தினியை பெற்றோா்கள், பள்ளியின் தலைவா் உள்ளிட்டோா் சனிக்கிழமை பாராட்டினா்.

    சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அரியவா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நந்தினி. இவா் , மதுரையில் விகேஎஸ் சிலம்பம் மற்றும் யோகா தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனைக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று, தொடா்ந்து 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தாா். இதையடுத்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

    இதையடுத்து, நந்தினி மற்றும் பயிற்றுநா் சண்முகவேல் ஆகிய இருவரையும் அரியவா பள்ளியின் தலைவா் ராமச்சந்திரன் , முதுநிலை முதல்வா் சித்ராமாரிதாசன், பள்ளியின் முதல்வா் கண்ணன், மாணவியின் பெற்றோா், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் சனிக்கிழமை பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai