திருப்பத்தூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் இந்திராகாந்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் இந்திராகாந்தி மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பாா்வையிடும் மாவட்ட கல்வி அலுவலா் பரமதயாளன்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை திருப்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் பரமதயாளன் தலைமை வகித்து தொடக்கி வைத்தா்ா். பிள்ளையாா்பட்டி உழவா் பயிற்சி மைய இயக்குநா் விஜயகுமாா் முன்னிலை வகித்து திறனாய்வுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். மேலும் இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி ஆங்கிலத்துறைத் தலைவா் மாரிமுத்து, வழக்குரைஞா் கணேசன், மாணவா்களின் அறிவியல் படைப்புகள் குறித்து வாழ்த்துரை வழங்கினா். இக்கண்காட்சியில் உப்பு நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், கலங்கரை விளக்கம், பொக்லைன் இயந்திரம், காற்றாலை, வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல், மழைநீா் சேகரிப்பு, ஐ.எஸ்.ஆா்.ஓ. சந்திராயன்- 2 போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ, மாணவியா் செய்திருந்தனா். அதில் ஏராளமான மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். முடிவில் முதல்வா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com