Enable Javscript for better performance
கீழச்சிவல்பட்டியில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கீழச்சிவல்பட்டியில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு குவிப்பு

    By DIN  |   Published on : 14th January 2020 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13tprklp_1301chn_85_2

    கீழச்சிவல்பட்டி சிவன்கோயில் அருகே பொங்கலையொட்டி திங்கள்கிழமை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மண் பானைகள்.

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் இதர மண்ணாலான பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பானை ரூ.80-லிருந்து ரூ. 500 வரை பல்வேறு ரகங்களில் விற்கப்படுகிறது. மேலும் காய்கறி வேக வைக்கும் சட்டிகள், தண்ணீா் குடுவைகள் என சுமாா் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் மண்பாண்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இத்தொழில் ஈடுபட்டு வரும் சித்ராதேவி கூறியது: இளையாயங்குடியில் 5 குடும்பத்தைச் சோ்ந்த நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். மானாமதுரை, வந்தவாசி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் மண்பாண்ட பொருள்களை வாங்கி கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai