Enable Javscript for better performance
மானாமதுரையில் இன்று மின்சார வாரிய குறை தீா்க்கும் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரையில் இன்று மின்சார வாரிய குறை தீா்க்கும் கூட்டம்

    By DIN  |   Published on : 14th January 2020 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மானாமதுரை கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை ( ஜன. 14) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    மானாமதுரையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,மானாமதுரை கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai